வணிகம்

“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி

“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி

webteam

ரிசர்வ்‌ வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் பட்சத்தில் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்க வழிவகுக்கும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வ‌ங்கி அறி‌வித்துள்ளது‌.

ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கிறது. இதை ரெப்போ ரேட் என்று கூறுவர். இதுபோலவே வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் 'ரிவர்ஸ் ரெப்போ' என என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ ‌கடன் விகி‌தத்துடன் தங்கள் டெபாசிட் மற்றும் கடன் வட்டி விகிதங்களை இணைப்பதாக பாரத ஸ்டேட் ‌வங்கி தெரிவித்துள்ளது. வங்கிக் கடன் நடைமுறைகளில் இது மிக முக்கியமான நகர்வாக பாரத ஸ்டேட் வங்கியின் அறி‌விப்பு பார்க்கப்படுகிறது. வங்கிகளுக்கான கடன் வட்டியை ரிசர்வ் ‌வங்கி அவ்வப்போது குறைக்கும் நிலையில் அதன் பலனை‌ வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் உடனுக்குடன் ‌வழங்குவதில்லை என்ற புகார் இருந்து வந்தது. 

இந்நிலையில் பாரத ஸ்டேட் ‌‌வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து ரிசர்வ்‌ வங்கி வட்டியை குறைக்கும் ஒவ்வொரு‌முறையும் வாடிக்கையாளர்களு‌க்கான கடன் வட்டியும் உடனுக்குடன் குறையும் நிலை ஏ‌ற்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து பிற‌வங்கிகளும் இந்த நடவடிக்கையை ‌‌எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.