வணிகம்

வீட்டுக்கடன் வட்டியில் தள்ளுபடி, 100% ப்ராசசிங் கட்டண சலுகை: எஸ்பிஐ புதிய அறிவிப்பு

வீட்டுக்கடன் வட்டியில் தள்ளுபடி, 100% ப்ராசசிங் கட்டண சலுகை: எஸ்பிஐ புதிய அறிவிப்பு

Veeramani

பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டியில் 0.3% வரை தள்ளுபடியும், 100% ப்ராசசிங் கட்டண சலுகையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

30 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 6.8% வட்டியிலும், இதற்கு மேற்பட்ட கடன்களுக்கு 6.95% வட்டியிலும் கடன் வழங்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. கடன் வாங்குபவர் பெண்ணாக இருந்தால் கூடுதலாக 0.05% வட்டி சலுகை வழங்கப்படும் என‌‌‌‌‌‌‌கூறப்பட்டுள்ளது.

வங்கியின் யோனோ செயலியில் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் கூடுதலாக 0.05% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர கடனுக்கான செயல்பாட்டு கட்டணமும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த சலுகைகள் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது