வணிகம்

எஸ்பிஐ-ன் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைப்பு

webteam

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் உள்ளிட்ட அளவுகோல்களுக்கு ஏற்ப பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதங்களை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதங்களுக்கு ஏற்ப வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் குறைக்கப்போவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே‌ 8.05 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் 7.8 சதவிகிதமாகக் குறையும்.

இதனால், பாரத ஸ்டேட் வங்கியில் ஏற்கெனவே வீட்டுக் கடன் மற்றும் சிறு, குறு, நடுத்த தொழில்களுக்காக கடன் பெற்றவர்களுக்கான வட்டி விகிதம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குறையும். அதேபோல, புதிதாக வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதம் 7.9 சதவிகிதமாக இருக்கும் எனவும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.