வணிகம்

எஸ்.பி.ஐ.யின் மினிமம் பேலன்ஸ் அபராதம் - மறுஆய்வு செய்ய திட்டம்

webteam

எஸ்.பி.ஐ.வங்கியில் மினிமம் பேலன்ஸ் வைக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, நகர்ப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் மினிமம் 5000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் 1000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து, வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், இந்த அபராத கட்டணம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. அதாவது, மூத்த குடிமக்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.