வணிகம்

ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் முன்னிலை

ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் முன்னிலை

Rasus

ஸ்மார்ட்போன் சந்தையின் இரண்டாவது காலாண்டு விற்பனையில் சாம்சங் நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது.

நடப்பு ஆண்டின் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பு மொபைல்கள் 29 சதவிகித அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஸ்மார்ட்போன் சந்தை நிலவரத்தை வெளியிடும் கவுண்டர்பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட கேலக்சி ஜே ரக சாம்சங் ஸ்மார்ட்போன்களில் புதிய வரவுகளின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளன.

சீன தயாரிப்பான ஜியோமி மொபைல்கள் 28 சதவிகிதம் விற்பனை செய்யப்பட்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன. சாம்சங், ஜியோமி, விவோ, ஒப்போ, மற்றும் ஹவாய் உட்பட மொத்தம் ஐந்து பிராண்டுகள், ஸ்மார்ட்போன் சந்தையில் 82 சதவிகிதத்தை கைப்பற்றின. ஆப்பிள் போன்கள் ஒரு சதவிகிதம் மட்டுமே விற்பனையாகியுள்ளன.