வணிகம்

8 ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரி : வருகிறது சாம்சங் ‘கேலக்ஸி எம்31எஸ்’

8 ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரி : வருகிறது சாம்சங் ‘கேலக்ஸி எம்31எஸ்’

webteam

சாம்சங் நிறுவனத்தின் புதிய உற்பத்தியான கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் இந்திய சந்தைகளில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குழந்தைகளின் ஆன்லைன் கல்வி முதல் பல்வேறு ஆன்லைன் சேவைகள் வரை ஸ்மார்ட்போன்களின் பயன் அதிகரித்துள்ளதால், அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் புதிய ஸ்மார்ட்போன்களை அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் முன்னணி செல்போன் நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் தங்கள் ‘கேலக்ஸி எம்31எஸ்’ மாடலை ஜூலை 30ஆம் தேதி வெளியிடுகிறது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இந்த போன் செயல்படும். 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போன், கருப்பு மற்றும் நீளம் ஆகிய நிறங்களில் வெளிவருகின்றன. பின்பக்கத்தில் மட்டும் 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5 எம்பி என 4 கேமராக்கள் இதில் பொறுத்தப்பட்டுள்ளன. முன்புறம் 32 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரம் சார்ஜ் நிக்கக்கூடிய வகையில் 6,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு ரகத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.