வணிகம்

இந்தியாவிடம் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்கும் ரஷ்யா

இந்தியாவிடம் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்கும் ரஷ்யா

Veeramani

உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கிய பிறகு, ஐரோப்பா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதியை கடுமையாகக் குறைத்த நிலையில் இந்தியாவிடம் இருந்து அதிக அளவிலான மருத்துவ உபகரணங்களை ரஷ்யா வாங்கவுள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மருத்துவ உபகரண நிறுவனங்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறும் மெய்நிகர் சந்திப்பின் போது, மருத்துவ உபகரண பொருட்களின் விநியோகத்தை  அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கும் என்று இந்திய மருத்துவ சாதனத் தொழில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் நாத் தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவுகளை ஊக்குவிக்கும் வணிகக் குழுவான பிசினஸ் ரஷ்யா அமைப்பும் இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியுள்ளது.



உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கிய பிறகு அமெரிக்கா , கனடா , ஐரோப்பிய நாடுகள் உட்பட பல உலக நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ளது.  உக்ரைனில் நடக்கும் போரின் காரணமாக ரஷ்யாவை தனிமைப்படுத்த பல பொருளாதார தடைகளை விதித்த பின்னரும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்குவதாக இந்தியா விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த உள்ளூர் நாணயங்களில் பணம் செலுத்தும் முறையை ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் உருவாக்குவதால், ரஷ்யாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என இந்தியா நம்புகிறது. தற்போது, ரஷ்ய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், இந்த ஆண்டு ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை 10 மடங்கு அதிகரித்து 2 பில்லியன் ரூபாயாக ($26.2 மில்லியன்) உயர்த்தலாம் என இந்தியா திட்டமிட்டுள்ளது.