வணிகம்

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் வரி வருவாய் உயர்வு

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் வரி வருவாய் உயர்வு

Sinekadhara

கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் வரி வருவாய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

தலைமை கணக்கு தணிக்கையாளர் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டிசம்பர் மாதத்துடன் முடிந்த மூன்றாம் காலாண்டின் முடிவில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் 97 ஆயிரத்து 887 கோடியே இருபத்தோரு லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த வருவாயில் வரிகள் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் 69 ஆயிரத்து 943 கோடியே 71 லட்சம் எனத் தெரிய வந்துள்ளது. இதுவே கடந்த நிதி ஆண்டில் 53 ஆயிரத்து 711 கோடியே 70 லட்சமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் கூடுதலாக 16 ஆயிரத்து 232 கோடியே லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

மூன்று காலாண்டுகளிலும் தமிழ்நாடு அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் கிடைத்த வருவாய், 23 ஆயிரத்து 386கோடியே 89 லட்சமாக உள்ளது. இதுவே முந்தைய காலாண்டில் 17 ஆயிரத்து 786 கோடியே 26 லட்சமாக இருந்தது. பத்திரவு பதிவுகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 5 ஆயிரத்து 320 கோடியே 86 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் பத்திரப்பதிவு மூலம் கிடைத்த வருவாய் 3 ஆயிரத்து 715கோடியே 42 லட்சமாக இருந்தது.

பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்ததால் அதன் மூலம் கிடைத்த விற்பனை வரி வருவாய், நடப்பு நிதி ஆண்டில் 16 ஆயிரத்து 637 கோடியே 9 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் இவ்வருவாய் 11 ஆயிரத்து 731 கோடியே 61 லட்சமாக இருந்தது.