பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், புதிதாக ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு, பொதுமக்களுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டை வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புதிய 1000 ரூபாய் நோட்டில் சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்றும், புதிய நோட்டுக்கள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் இந்த நோட்டுக்கள் மைசூரு மற்றும் சல்போனியில் அச்சடிக்கப்பட உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சமீபத்தில் புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடதக்கது. விரைவில் புதிய 1000 ரூபாய் நோட்டுகளும் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.