ஜியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 9' என்ற இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் இந்தியாவில் ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃப்ரம் ஹோம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட காரணங்களால் செல்போன்களின் தேவை அதிகரித்துவிட்டன. இதனால் செல்போன்களில் விலையையும் உயர்ந்துள்ளன. சந்தைகளில் பட்ஜெட் விலையில் செல்போன் என்பது குறைந்துள்ளது.
இந்நிலையில் ஜியோமி நிறுவனம் பட்ஜெட் விலையிலான தங்கள் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் எம்.ஐ இணையதளம், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்களில் விற்கப்படவுள்ளன. ஆரஞ்சு, நீளம் மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஸ்டோரேஜை பொறுத்து இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டேர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.8,999 எனவும், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.9,999 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
டிஸ்ப்ளே : 6.53 இன்ச் ஹெச்டி
பிராசெஸர் : மீடியோடெக்’ஸ் ஹெலியோ ஜி35
கேமரா : 13 எம்பி + 2 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
பேட்டரி : 5,000 எம்ஏஹெச்
நெட்வொர்க் : 4ஜி வோல்ட்