வணிகம்

வங்கிக் கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்குமா ரிசர்வ் வங்கி?

வங்கிக் கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்குமா ரிசர்வ் வங்கி?

Sinekadhara

கொரோனாவால் மக்கள் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். வணிக ரீதியாக மற்றும் தனிப்பட்ட முறையில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் மக்கள் இருப்பதால் 6 மாத காலம் வழங்கப்பட்ட வங்கி தவணை அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் மேலும் இதை நீட்டித்தால் கடன் வாங்கியவர்களுக்கு திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதோடு பல குற்றங்களும் நடக்க வாய்ப்பு இருப்பதாக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வசதியை பலரும் தவறாகப் பயன்படுத்துவதால் தற்காலிகமாக நீட்டிக்க வேண்டாம் என்று எச்.டி.எஃப்.சி லிமிடெட் தலைவர் தீபக் பரேக் மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோட்டக் உட்பட பல வங்கியாளர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு பிறகு வங்கி இம்ஐ செலுத்துவதற்கான அவகாசத்தை ரிசர்வ் வங்கி மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.