வணிகம்

குறைக்கப்பட்டது குறுகிய கால கடன்களுக்கான வட்டி ! - ரிசர்வ் வங்கி

குறைக்கப்பட்டது குறுகிய கால கடன்களுக்கான வட்டி ! - ரிசர்வ் வங்கி

Rasus

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுளள்து.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) தற்போதைய 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி‌யின் புதிய ஆளுநராக சக்திகாந்ததாஸ் பொறுப்பே‌றற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.