வணிகம்

சாமானியர்களின் குடும்பங்களுக்கு சுமையாகும் எண்ணெய் விலை: தற்போதைய விலை நிலவரம்

சாமானியர்களின் குடும்பங்களுக்கு சுமையாகும் எண்ணெய் விலை: தற்போதைய விலை நிலவரம்

Veeramani
சமையல் எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில், கடந்த மாதத்தை ஒப்பிடும்போது சற்று குறைந்துள்ளது. எண்ணெய் வகைகளின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் அனைத்து வகை சமையல் எண்ணெய்களின் மொத்த உள்நாட்டுத் தேவை ஆண்டொன்றுக்குச் சுமார் 240 லட்சம் டன். 2019-20ல் மட்டும் 133.5 லட்சம் டன் அளவுக்கு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது உள்நாட்டுத்தேவையில், 56% ஆகும். கூடுதல் தேவைகளுக்காக இந்தோனேஷியா, மலேசியா, உக்ரைன், அமெரிக்கா, அர்ஜெண்டினா நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா பரவல், உற்பத்தி சரிவு காரணமாக இறக்குமதியும் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு சமையல் எண்ணெய் விலை அதிகரித்தது. இந்த விலை குறைவு இன்னும் சந்தையில் முழுமையாக எதிரொலிக்காததால் சமையல் எண்ணெய் விலை குடும்பங்களுக்கு சுமையாக உள்ளது
தற்போது வெளிநாடுகளில் தொற்று குறைவதால் அங்கு உற்பத்தி அதிகரித்து இந்தியாவில் எண்ணெய் இறக்குமதியும் அதிகரித்துள்ளதால் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது சமையல் எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் லிட்டருக்கு 195 ரூபாய்க்கு விற்கப்பட்டநிலையில் தற்போது 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாமாயில் கடந்த மாதம் 155 ரூபாய்க்கும்,. இன்று 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தேங்காய் எண்ணைய் 245 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்215 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடலை எண்ணெய், 220 ரூபாய்க்கு விற்றநிலையில் இன்று 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. , நல்லெண்ணெய் விலை 290 ரூபாயில் இருந்து 270 ரூபாயாக குறைந்துள்ளது. விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.
அடுத்துவரும் காலங்களில் எண்ணெய் விலை குறையும் என்பதால் சாமான்ய குடும்பங்களின் சுமை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது