137 நாள் இடைவெளிக்குப் பின் தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது.
அதன்படி சென்னையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ.92.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நேற்றைய தினம் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு லிட்டருக்கு 76 காசு அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102.16 ரூபாய்க்கும்; டீசல் 92.19 ரூபாய்க்கும் விற்பனையானது. அதைத்தொடர்ந்து இன்றும் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் பெட்ரோல் டீசல் விலையுடன் சேர்த்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் 5 மாநில தேர்தலுக்கு பிறகு எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதேபோல அவற்றின் விலை உயர்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர், மொத்த விற்பனையில் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: LIC பங்கு விற்பனை - மத்திய அரசின் திருத்தங்களை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!