வணிகம்

’செயலிகளுக்கான ஆக்ஸிஜனை கூகுள் கட்டுப்படுத்துகிறது’: பேடிஎம் சிஇஓ குற்றச்சாட்டு

’செயலிகளுக்கான ஆக்ஸிஜனை கூகுள் கட்டுப்படுத்துகிறது’: பேடிஎம் சிஇஓ குற்றச்சாட்டு

Veeramani

கூகிள் நிறுவனத்தை 'பிக் டாடி' என்று அழைத்த பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி, கூகுளின் இந்த சுனாமியை நிறுத்த கைகோர்க்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனர்களுடனான வீடியோ அழைப்பின் போது, பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கூகுள் நிறுவனத்தை ”பிக் டாடி (பெரிய அப்பா)" என்று அழைத்தார். கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் " ஆப் செயலிகளுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை (பயன்பாடு) கட்டுப்படுத்துகிறது" என்று தெரிவித்தார். மேலும் கூகுள் நிறுவனத்தின் "இந்த சுனாமியை நிறுத்த" மற்ற நிறுவன நிர்வாகிகள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தங்கள் நிறுவனத்தின் கொள்கை மீறல்களைக் காரணம் காட்டி கூகுள் நிறுவனம், கடந்த மாதம் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை திடீரென்று நீக்கியது. இந்தியாவின் பிரபலமான பண பரிமாற்றம் மற்றும் விற்பனை செயலியாக பேடிஎம் செயலி உள்ளது குறிப்பிடத்தக்கது.