வணிகம்

ஐ.டி.ரெய்டு: 35% குறைந்தது வெங்காயம் விலை

ஐ.டி.ரெய்டு: 35% குறைந்தது வெங்காயம் விலை

webteam

வெங்காய வியாபாரிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதை அடுத்து, அதன் விலை 35 சதவிதம் குறைந்தது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள லசல்கோன் வேளாண் உற்பத்தி சந்தை இந்தியாவிலேயே பெரிய வெங்காய சந்தையை கொண்டதாகும்.

 நாசிக் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் வெங்காய வியாபாரிகள் 7 பேருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர், இதனையடுத்து மார்க்கெட்டில் வெங்காய மொத்த விற்பனை விலை 35% குறைந்துள்ளது. விலை சரிவு ஏற்பட்டதை அடுத்து விவசாயிகள் மார்க்கெட்டில் வெங்காயத்தை ஏலம் விடுவதையும், விற்பனை செய்வதையும் நிறுத்தி வைத்து உள்ளனர். 

புனேவை சேர்ந்த மூத்த வருமான வரித்துறை அதிகாரி கூறும்போது, நாசிக் பிரிவை சேர்ந்த 120 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார். 

லசல்கான் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பெரும் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாகவும், விலையை உயர்த்த அவர்கள் வெங்காய பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர் எனவும் கிடைத்த தகவலை அடுத்து இந்த வருமான வரி சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.