வணிகம்

ஒரு ரூபாயில் அரசின் வரவு - செலவு: விவரம்

ஒரு ரூபாயில் அரசின் வரவு - செலவு: விவரம்

கலிலுல்லா

மத்திய அரசின் வரவு செலவை ஒரு ரூபாய் அடிப்படையில் இப்போது பார்க்கலாம்

அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் 35 காசுகள் கடன் மற்றும் அது தொடர்பான வழிகளில் வருகிறது. ஜிஎஸ்டி வரி வருவாய் மூலம் 16 காசுகள் அரசுக்கு கிடைக்கிறது. வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி மூலம் தலா 15 காசுகள் வருவாய் வருகிறது. மத்திய கலால் வரி மூலம் 7 காசுகள் அரசுக்கு கிடைக்கிறது. சுங்க வரி மூலம் 5 காசுகள் கிடைக்கிறது. வரியல்லாத இனங்கள் மூலம் 5 காசுகள் வருகிறது.

கடன் அல்லாத மூலதன வரவுகள மூலம் 2 காசுகள் கிடைக்கிறது. அடுத்து ஒவ்வொரு ரூபாயும் எந்த அடிப்படையில் செலவளிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

கடன்களுக்கான வட்டியை திரும்பச் செலுத்துவதற்காக ஒவ்வொரு ரூபாயிலும் 20 காசுகளை அரசு செலவளிக்கிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்காக 17 காசுகள் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்ட செலவினங்களுக்கு 15 காசுகள் செலவளிக்கப்படுகிறது. நிதிக்குழுவுக்கு வழங்குவது உள்ளிட்ட வழிகளில் 10 காசுகள் தரப்படுகிறது.

மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மற்ற வகை செலவினங்கள் என்ற முறையில் தலா 9 காசு செலவாகிறது. மானியங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடாக தலாக 8 காசுகள் வழங்கப்படுகிறது. அரசு தனது மொத்த வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும் ஓய்வூதியம் என்ற வகையில் 4 காசுகளை செலவளிக்கிறது