பண மதிப்பு நீக்கத்திற்குப் பின் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.25 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்த ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்ததவர்களின் வருமான வரிக்கணக்குகள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் ரூ25 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களை ஆய்வு செய்த போது அவர்களில் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் உரியநேரத்தில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் எனத் தெரியவந்தது. அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதேபோல் ரூ.10 முதல் 25 லட்சம் வரையில் பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்தவர்களில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் உரிய நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்தார். இவர்கள் 30 நாட்களுக்குள் வரிக்கணக்கு தாக்கல் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.