வணிகம்

“S1 மாடல் விலை ரூ99,999” - இந்திய சந்தையில் அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

EllusamyKarthik

நீண்ட காலமாக எதிர்பார்க்கபப்ட்ட ஓலா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் இந்திய சந்தையில் இன்று அறிமுகமானது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் S1 மற்றும் S1 புரோ செக்மெண்ட் வாகனங்கள் அறிமுகமாகி உள்ளன. 

இதில் S1 எக்ஸ்-ஷோரூம் விலை 99,999 ரூபாய், S1 புரோ எக்ஸ்-ஷோரூம் விலை 1,29,999 ரூபாய் என உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் மானியம் அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த வாகனத்தின் விலை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வித்தியாசப்படும். குஜராத்-ல் இந்த மாடல் ரூ.79,999-க்கு (எஸ் 1 புரோ 1,09,999) விற்கப்படும். டெல்லியில் ரூ.85099 ((எஸ் 1 புரோ 1,10,149) என விற்கப்படும். மகாராஷ்டிராவில் மானியத்துக்கு பிறகு ரூ.89,999 (எஸ் 1 புரோ 1,24,999) என விற்கப்படும் என அறிவிக்கபட்டிருக்கிறது. ராஜஸ்தானில் எஸ் 89968 ரூபாய்க்கும் எஸ் 1 புரோ 1,19,138 ரூபாய்க்கும் விற்கபடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதர மாநிலங்களில் ரூ.99999 மற்றும் 129999 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

EMI-யிலும் இந்த வாகனம் கிடைக்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த வாகனம் டெலிவரி செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தை செப்டம்பர் 8ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என ஓலா தெரிவித்துள்ளது. ரூ.499க்கு முன்பதிவு அறிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகள் நடந்ததாக ஓலா அறிவித்தது.

ஓலா S1 மாடலில் அதிகபட்சம் 90 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. S1 புரோ மாடலில் 115 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஹோம் டெலிவரி செய்யவும் ஓலா ஏற்பட செய்துள்ளது.  சில வாரங்களுக்கு முன்பு வாகனத்துக்கான முன்பதிவு நடந்த்து. ரூ.499க்கு முன்பதிவு அறிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகள் நடந்ததாக ஓலா அறிவித்தது.