வணிகம்

அக்டோபர் - டிசம்பர்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு?

அக்டோபர் - டிசம்பர்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு?

Sinekadhara

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பவர் வரையான 3 மாதங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவிகிதமாக குறைந்துள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டின் வளர்ச்சிக்கான கணிப்பு 9.2 சதவிகிதம் என்ற நிலையில், அது 8.9 சதவிகிதமாக குறையும் எனத் தெரியவந்துள்ளது. சென்ற நிதியாண்டின் வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான கணிப்பு, சுமார் 2 சதவிகிதம் அதிகம். கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக நான்காவது காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரை வளர்ச்சி, கணித்ததைவிட மேலும் குறைய வாய்ப்புள்ளது.