வணிகம்

செக் புக் வாபஸ் இல்லை: குழப்பத்தை தெளிவு படுத்திய மத்திய அரசு

செக் புக் வாபஸ் இல்லை: குழப்பத்தை தெளிவு படுத்திய மத்திய அரசு

webteam

வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலைகளை திரும்ப பெரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் இந்தியாவில் இன்று வரை புழக்கத்தில் இருந்து வந்த பல திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. அதில் ஒரு வகையாக வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலைகளை மத்திய அரசு திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக எதிர்காலத்தில் மத்திய அரசு, வங்கி காசோலைகளை திரும்ப பெறும் என்று கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் எந்தவித விளக்கமும் தரப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்விக்கும் விதமாக மத்திய அரசு வங்கி காசோலையை திரும்ப பெறும் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் உண்மை இல்லை என்றும், மத்திய அரசுக்கு இதுபோன்ற எந்தவொரு திட்டமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.