வணிகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் - நிதியமைச்சர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் - நிதியமைச்சர்

Sinekadhara

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அதிக நிதியுதவி வழங்கப்படுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடிவரை கடன் வழங்கப்படும் எனவும், சுகாதார உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.50000 கோடி கடனுக்கு உத்தரவாதமும் அளித்துள்ளார். 7.95% வட்டியில் மூன்றாண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும் எனவும், பிற துறைகளுக்கான கடனுக்கு வட்டி 8.25 சதவிகிதமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அவசரகால கடன் வசதியாக தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப்படும் எனவும், அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலம் தொழில்துறைக்கு கடனுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.