இந்தியாவில் நுகர்வோர்களால் அதிகம் வாங்கி பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களின் (FMCG) விலை உயர உள்ளதாக தெரிகிறது. நாட்டின் தற்போதைய பணவீக்க சூழலுக்கு மத்தியில் இந்த FMCG நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக உள்ள நெஸ்லே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் விலை உயர்வை முன்னெடுத்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த இரு நிறுவனங்களும் டீ, இன்ஸ்டன்ட் காபி, நூடுல்ஸ் மற்றும் பால் விலையை உயர்த்தி உள்ளதாக தகவல். பணவீக்கமே இதற்கான காரணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளனவாம்.
HUL நிறுவனத்தின் வசமுள்ள ப்ரூ காபியின் விலை 3 முதல் 7 சதவிகிதம் வரை கூடுகிறது. தாஜ் மஹால் டீ 3.7 முதல் 5.8 சதவிகிதம் வரையிலும், ப்ரூக் பாண்ட் டீ 1.5 முதல் 14 சதவிகிதம் வரை உயர்கிறதாம்.
அதே போல நெஸ்லே நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற உணவு பொருளான மேகி நூடுல்ஸ் 9 முதல் 16 சதவிகிதம் வரை அதிகரிக்கிறதாம். அதே போல நெஸ்லேவின் தயாரிப்பான பால் மற்றும் காபி தூள் விளையும் அதிகரிக்கிறதாம்.