வணிகம்

நிபுணர் அறிவுரை இல்லாம மியூச்சுவல் ஃபண்ட்-ல் முதலீடு போட போறீங்களா? உங்களுக்குதான் இது!

நிபுணர் அறிவுரை இல்லாம மியூச்சுவல் ஃபண்ட்-ல் முதலீடு போட போறீங்களா? உங்களுக்குதான் இது!

webteam

மியூச்சுவல் ஃபண்ட். இந்த பெயரை, நாம் எல்லோருமே கேட்டிருப்போம். சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்ற விளம்பர வடிவிலும் பார்த்திருப்போம். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அப்படியானவர்களுக்கானது தான் இந்த கட்டுரை. மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன என்பதை குறித்த விளக்கத்தை வர்த்தக ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, நமக்கு கூறினார். இதோ அந்த விவரங்கள்:

“1964 ல் இந்திய அரசாங்கம் UTI வழியாக இதை அறிமுகம் செய்தது. சாமாண்ய மக்களும் இதில் முதலீடு செய்யவேண்டும் என்று கொண்டு வரப்பட்ட திட்டம் இது.

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

நம் கையில் இருக்கும் பணத்தை நேரடியாக முதலீடு செய்யாமல், தேர்ந்த ஒரு முதளீட்டாளரிடம் தந்து, அவர் அப்பணத்தை பங்கு சந்தையில் ஈடுபடுத்தி அதிலிருந்து வரும் லாபத்தையும் நட்டத்தையும் நமக்கு வழங்குவார். இது தான் மியூச்சுவல் ஃபண்ட்”

வங்கியில் முதலீடு செய்வது - மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது: எது லாபம்?

முதலில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வங்கியில் முதலீடு செய்கையில், மறைமுகமாக நமது பணத்தை நாம் இழந்து வருகிறோம்தான். உதாரணத்திற்கு, நாம் வங்கியில் ஒரு லட்சம் டெபாஸிட் செய்வதாக கொள்வோம் என்றால், வங்கி நமக்கு 7% வட்டி அளிக்கவேண்டும். ஆனால் பண வீக்கத்தின் மதிப்பால் வட்டியின் அளவு குறைந்து 4% வட்டி மட்டுமே நமக்கு வழங்கப்படும். மீதம் 3% நமக்கு நட்டம். ஆக, பணம் என்ற பரிவர்த்தனையில் பணவீக்கத்தால், நமக்கு லாபம் குறைகிறது.

ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்டின் மூலம் நேரடியாக கம்பெனிகளில் நாம் முதலீடு செய்வதால், அவர்கள் அடையும் இலாபம் குறையாமல் நமக்கு பிரித்து வழங்கப்படும். மட்டுமன்றி மியூச்சுவல் ஃபண்ட்டில் நீண்ட நாள் முதலீடுகள் (long terms investment), பங்கு சந்தை முதலீடுகள் (share market), தங்கம், மற்றும் வெள்ளி (Gold and silver investment) என நிறைய முதலீடு முறைகள் உள்ளது. அவற்றை அறிந்து முதலீடு செய்ய வேண்டும்

முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்ட்-ல் முதலீடு செய்ய விரும்பும் மக்கள் எதில் முதலீடு செய்யலாம்?

debt Mutual funds, equity, balance fund ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்

சொந்த முயற்சியிலேயே முதலீடு செய்யலாமா? அல்லது தேர்ந்த பயிற்சியாளரின் ஆலோசனை கேட்டு முதலீடு செய்ய வேண்டுமா?

தேர்ந்த பயிற்சியாளாரிடம் ஆலோசனை கேட்டு முதலீடு செய்யும்போது நட்டம் ஏற்பட வாய்ப்பு குறையும்

Growth option - Divident option இதில் எதில் முதலீடு செய்யலாம்?

growth option தான் சிறந்தது

முதல் முறை முதலீடு செய்பவர்கள் எதில் கவனமாக இருக்க வேண்டும்?

முதலீடு செய்வதென்பது சுலபம் இல்லை. அதில் நிறைய சூட்சமங்கள் இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் தாக்கம், உலகபொருளாதாரத்தின் தாக்கம், இந்திய மற்றும் உலகளாவிய கம்பெனிகளின் வளர்ச்சி என ஏகப்பட்ட விஷயங்கள் அதில் உண்டு.

அதேபோல் கடந்த வருடங்கள் லாபத்தை தந்த கம்பெனிகளை கண்டு, அதில் முதலீடு செய்வதும் ரிஸ்க். இதுகுறித்து sibi ஒரு வாசகத்தையும் உதிர்த்துள்ளது. அது, `past record is not guarantee for future results’ என்பது. அதாவது, `கடந்த கால முடிவுகள், எதிர்கால முடிவுகளுக்கான உத்தரவாதம் அல்ல’. ஆக முதலீடு செய்வதற்கு முன்பாக நாம தெரிந்துக்கொள்ளவேண்டியது, எங்கு முதலீடு செய்கிறோம், எதற்காக செய்கிறோம், அதில் உள்ள ஆபத்து என்ன? அதன் அளவு என்ன? முதலீடு செய்யும் நாட்கள் எத்தனை? - என்பதற்கான பதில்கள். இதை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது முக்கியம்

முதலீடு செய்பவர்கள் தங்களின் பண இருப்பை எப்படி தெரிந்துக்கொள்வது?

சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இறக்கம் வரும்பொழுது நட்டம் வந்து விட்டதே என்று அவசரபட்டு எடுத்துவிட்டால், ஏற்றம் வரும்பொழுது லாபத்தை இழக்கவேண்டி வரும். ஆகவே இதில் அனுபவம் பெற்றவர்களின் அறிவுரை மிகவும் அவசியம்

மியூச்சுவல் ஃபண்ட்-ல் வரிவிலக்கு இருக்கிறதா?

“மியூச்சுவல் ஃபண்ட்-ல் வருமானவரிச் சட்டம் 1961 -இன் பிரிவு 80C -இன் கீழ் விண்ணப்பிக்கையில், அப்பிரிவு ரூ. 1.5 இலட்சம் வரை வரிவிலக்கு பெறுவதற்கு தனிநபர் அல்லது HUF -க்கு உதவுகிறது. இது நாம் முதலீடு செய்யும் கால அளவை பொறுத்தது. பொதுவாக இதில் முதலீடு செய்பவர்கள், தங்களது வருவாயை அதிகரிக்க மட்டுமே நினைப்பதால், ஒருமுறை வரி செலுத்துவதை பற்றி யோசிப்பதில்லை. அப்படி 80c அவசியம் வேண்டும் என்றால், இன்ஸூரன்ஸ் முதலியவற்றில் போட்டுக்கொள்ளலாம்”