வணிகம்

சென்செக்ஸ் ஒரேநாளில் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

சென்செக்ஸ் ஒரேநாளில் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

Rasus

இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தின வர்த்தகத்தில் இன்று ஏற்றத்தை சந்தித்துள்ளது.

பெரும் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 22 சதவிகிதமாகக் குறைத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மதியம் 2 மணியளவில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 600 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வர்த்தகமாகின.

இன்று ஒரு நாள் ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் செய்த முதலீடுகளின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.