2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆட்டோ மொபைல் வாகனங்களின் விலையும் உயர இருக்கிறது.
கியா, ஹூண்டாய், மாருதி சுசுகி, மகேந்திரா உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்து இருக்கிறன. வாகனங்களின் பரிமாற்ற வீத ஏற்ற இறக்கங்கள், இறக்குமதி, வாகனப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் எடுக்கப்பட உள்ள இந்த நடவடிக்கையால், இந்த மாதத்தில் வாகனங்களின் விற்பனை விகிதம் அதிகரிக்கும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
விலை உயர்வு அடையப்போகும் வாகனங்களின் பட்டியல்:
கியா எஸ்யூவி மற்றும் எம்பிவி மாடல் வாகனங்களின் விலை ஜனவரி மாதம் முதல் உயர இருக்கிறது. கியா செல்டோஸ் ரக வாகனத்தின் தற்போதைய விலை 9.89 லட்சத்தில் தொடங்கி 17.34 லட்சம் வரை இருக்கிறது. கியா சோனெட் ரக வாகனத்தின் விலை 6.71 லட்சத்தில் தொடங்கி 12.89 வரை இருக்கிறது. இந்த விலை மேலும் உயர இருக்கிறது.
ஹூண்டாய் கார் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்கள், மாருதி சுசுகி மற்றும் எஸ்யூவி ரக வாகனங்கள், மகேந்திரா எஸ்.யூ.வி ரக வாகனங்களின் விலையும் உயர இருக்கிறது.
அதேபோல எம்.ஜி. எஸ்.யூ.வி ரக வாகனங்களின் விலையானது தற்போதைய விலையிலிருந்து 3 சதவிதம் உயர இருக்கிறது. ஹோண்டா கார் மற்றும் எஸ்.யூ.வி ரக வாகனங்களின் விலையும் உயர்கிறது.
ரெனால்ட் கார் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்களின் விலை உயர்வு விலையானது 28,000 ரூபாயிலிருந்து தொடங்க இருக்கிறது. ஃபோர்டு கார் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்களின் விலையும், தற்போதைய விலையிலிருந்து 3 சதவீதம் அதிகரிக்க இருக்கிறது. காரின் மாடல்களை பொருத்து, விலை உயர்வு 5000 ரூபாயில் தொடங்கி 35,000 வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ, மினி கார் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்களின் விலையும் ஜனவரியிலிருந்து 4 சதவீதம் உயர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த வருடம் ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஹோண்டா நிறுவன வாகனங்களின் விலையும் அதிகரிக்க இருக்கிறது.