வாடிக்கையாளர்கள் இடையே மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் எச்டிஎப்சி வங்கி மிஸ்டு கால் பேங்கிங் சேவை எனும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
‘மிஸ்டு கால் பேங்கிங்’ திட்டத்தின் மூலம் எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் அவர்களது மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்திருத்தல் வேண்டும். இதன் மூலம் அவர்களது மாதந்திர பில் தொகை குறுஞ்செய்தியாக அவர்களது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். குறுஞ்செய்தியின் அடியில் ஒரு இலவச மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணிற்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் உங்களுடைய பில் தொகையானது வங்கி கணக்கிலிருந்து செலுத்தப்பட்டுவிடும்.
இதில் மொபைல் பில், மின்சார பில், வங்கிகளுக்கு செலுத்தப்படும் மாதந்திர கட்டணம் போன்றவை அடங்கும். இதற்கு மொபைலில் எந்த பிரேத்யேக செயலியும், ஆண்ட்ராய்டு மாடல் மொபைகளும் கையாள வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதும் என எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.