நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, குறிப்பிட்ட கார் மாடல்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்ரேட் வரி என்றழைக்கப்படும் வருமானவரி 22 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். இதன் எதிரொலியாக பல பொருட்களில் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது கார்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மாருதி சுசுகி நிறுவனம், தனது தயாரிப்புகளில் குறிப்பிட்ட கார்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பெருநிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, MARUTI ALTO 800, ALTO K10, SWIFT DIESEL, CELERIO, BALENO DIESEL உள்ளிட்ட மாடல் கார்களின் ஷோரூம் விலை 5 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.