வணிகம்

அக்டோபர் மாதத்தில் 1.80 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய மாருதி நிறுவனம் இலக்கு

அக்டோபர் மாதத்தில் 1.80 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய மாருதி நிறுவனம் இலக்கு

EllusamyKarthik

மாருதி சுஸுகி நிறுவனம் வரும் அக்டோபரில் 1.80 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி 2021 கடைசி காலாண்டில் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 

இந்த இலக்கை மாருதி நிறுவனம் அடைந்தால் செப்டம்பர் மாதத்தை காட்டிலும் கூடுதலாக 60 சதவிகிதம் கார்களை உற்பத்தி செய்யுமாம். புதிதாக உற்பத்தி செய்யப்படும் கார்களில் செமி கண்டக்டர் சிப்களை வைப்பது அவசியம். அந்த சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் கார்களின் உற்பத்தியை முன்னதாக குறைத்திருந்தது மாருதி. டெல்லி மற்றும் குஜராத்தில் அமைந்துள்ள உற்பத்தி கூடத்தில் இருந்து இந்த கார்களை மாருதி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. 

எதிர்வரும் விழாக்காலங்களை கணக்கில் கொண்டு மாருதி இந்த முடிவை எடுத்துள்ளதாம்.