வணிகம்

மாருதி சுஸுகி ‘2022 ஆல்டோ’-வின் சிறப்பம்சங்கள் குறித்த புதிய தகவல்

மாருதி சுஸுகி ‘2022 ஆல்டோ’-வின் சிறப்பம்சங்கள் குறித்த புதிய தகவல்

EllusamyKarthik

இந்திய கார் உற்பத்தியாளர்களில் முன்னணி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் வரும் 2022-இல் தனது பல்வேறு கார் மாடல்களில் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்ய உள்ளது. செலிரியோ, பலேனோ மற்றும் பிரெஸ்ஸா மாதிரியான மாடல்களின் வரிசையில் ஆல்டோவும் வரும் ஆண்டில் புதிய லுக்குடன் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் ‘2022 ஆல்டோ’-வின் சிறப்பம்சங்கள் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்போது விற்பனையாகி வரும் ஆல்டோ மாடலை காட்டிலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ள 2022 ஆல்டோ காரின் உயரம் மற்றும் நீளத்தில் கொஞ்சம் பெரிதாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் காருக்குள் போதுமான இடவசதி கிடைக்கும் என;j தெரிகிறது. 

ஹெட்லைட், டெயில் லைட், பம்பர் மாதிரியானவற்றிலும் மாற்றம் இருக்கும் என;j தெரிகிறது. இண்டீரியர் டிசைனிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இது தவிர தொடு திரை ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோஸ், ABS, முன்பக்கத்தில் இருபுறமும் ஏர்பேக்ஸ், ரிவர்ஸ் சென்சார் மாதிரியான புரோவிஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.