இந்திய பங்கு சந்தை புதியதலைமுறை
மார்க்கெட்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்பதற்றம் - இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி!

காலை 10 மணி வாக்கில், மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 910 புள்ளிகள் சரிந்து 83 ஆயிரத்து 355 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 281 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 25 ஆயிரத்து 515 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

PT WEB

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகின்றன. காலை 10 மணி வாக்கில், மும்பைப்
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 910 புள்ளிகள் சரிந்து 83 ஆயிரத்து 355 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 281 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 25 ஆயிரத்து 515 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி. எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சந்தைமதிப்பு மிக்க நிறுவனங்கள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்பதற்றத்தால் பங்குச்சந்தைகள் சரிந்ததாகக் கூறப்படுகிறது. சென்ற செவ்வாய்க்கிழமை அந்நிய முதலீட்டாளர்கள் 5 ஆயிரத்து 579 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை விற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்
ஒன்றரை சதவிகிதம் உயர்ந்து 74.75 டாலரில் வர்த்தகமாகியது.