இருக்கும் இடத்திற்கே, எத்தனை மணியானாலும் உணவு உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் நிறுவனங்கள் டெலிவரி செய்கின்றன. ஆனால், வாடிக்கையாளர்கள் அந்த சேவையை பெற கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது.
அதாவது, ரெஸ்டாரண்ட்களில் பரிமாறப்படும் ஒரு உணவினை, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது விலை சற்று அதிகமாகவே இருக்கிறது. இந்தத் தொகையை வாடிக்கையாளர்கள்தான் செலுத்த வேண்டியிருக்கிறது. கூடுதலாக செலுத்தப்படும் தொகை எந்த வரிக்கணக்கிற்கும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஒரே மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப்பொருட்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஜிஎஸ்டி விதிக்கப்படுவது குறித்த பேச்சுகள் தற்போது எழுந்து வருகின்றன.
இதுகுறித்து ரெஸ்டாரண்ட் உரிமையாளர்களிடம் கேட்டால், சுவிகி, சுமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு தாங்கள் 20 முதல் 25 விழுக்காடு வரை கமிஷன் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.