அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் FMCG அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள்
மார்க்கெட்

விலை உயரும் நுகர்வோர் பொருட்கள்... முதலீட்டுக்கு நல்ல காலமா..?

த. பிரபாகரன்

தோராயமாக விலை உயர்ந்து உள்ள பொருட்கள் :

சோப்புகள்: 2-9% அதிகரிப்பு

முடி எண்ணெய்கள்: 8-11% அதிகரிப்பு

காபி: 4-13% அதிகரிப்பு

சலவைத்தூள்: 1-10% அதிகரிப்பு

நூடுல்ஸ்: 17% உயர்வு

2022ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்த இந்த விலைவாசி உயர்வு 2023ம் ஆண்டு ஆரம்பம் வரை ஓராண்டுக்கு நீடித்தது. 

நிறுவனங்கள் மூலப்பொருட்கள் விலை உயர்வால் தங்களது மார்ஜின் குறையாமல் இருக்க விலையை உயர்த்தின. இதன் விளைவாக மக்கள் Branded பொருட்கள் வாங்குவது குறைந்தது. 

நிறுவனங்கள் விலையை உயர்த்தி லாபத்தை சீராக வைத்து இருந்த போதிலும், விற்கும் பொருட்களின் அளவு (Volume) வளரவில்லை. இதனால்  2024ம் ஆண்டு தொடக்கம் வரை விலையை ஏற்றாமல் நிறுவனங்கள் சமாளித்து வந்தன. இந்நிலையில் எண்ணெய் வகைகளில் கச்சா எண்ணெய், பாம் ஆயில் எண்ணெய்  போன்றவையும் காபி, தேங்காய், சர்க்கரை போன்ற மூலப்பொருட்கள் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்து உள்ளதால் நிறுவனங்கள் மீண்டும் மெதுவாக விலையை ஏற்ற ஆரம்பித்து உள்ளன. 

நிறுவனங்கள் தங்களது 4ம் காலாண்டு நிதிநிலை தொடர்பான முதலீட்டாளர் சந்திப்பில் இந்த நிதியாண்டில் (FY2025) காமடிட்டி (Commodity) பொருட்கள் 1-5% வரை விலை உயரலாம் என்று தெரிவித்து உள்ளன.   

தேர்தலுக்கு பிறகு விலையேறிய FMCG பங்குகள்

பெரும்பாலான பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக பெரும்பான்மை இல்லாத அரசு மத்தியில் வந்ததும் பாதுகாப்பான முதலீடு என கருதி FMCG பங்குகளை நோக்கி ஓடி விலையை வெகுவாக ஏற்றிவிட்டனர். 

  • FMCG பங்குகளை பொறுத்த அளவில், நிறுவனங்கள் விற்கும் பொருட்களின் அளவு அதிகரிக்க வேண்டும் . பெரும்பாலான நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் விற்கும் பொருட்களின் எண்ணிக்கையில் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவோம் என்று சொல்லி இருந்தாலும், அவை ஒற்றை இலக்கத்தில் இருக்கவே வாய்ப்பு அதிகம் என மோதிலால் நிறுவனம் கணித்து உள்ளது. 

  • ஆண்டின் தொடக்கத்தில் விலை உயர்ந்த கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்து உள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் நிறுவனங்களின் லாப விகிதம் அதிகரிக்கும் .

  • மத்திய அரசு நுகர்வை அதிகரிக்க செய்யும் நோக்குடன் பட்ஜெட் தாக்கல் செய்தால் அது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்.   

இந்த சூழ்நிலையில் FMCG பங்குகளை வாங்கலாமா?

சராசரி மழை, சாதகமான பட்ஜெட் , கிராமப்புற வாங்கும் சக்தி மீண்டும் திரும்புதல், சாதகமான காலநிலை (வெயில் & மழை) & குறைவான மூலப்பொருட்கள் விலை போன்ற அனைத்து காரணிகளும் சரியாக அமையும் பட்சத்தில் இந்தத்துறை மீண்டும் காளையின் பிடியில் செல்லும். தற்போதைக்கு நிறுவனங்களின் பொருள் விற்பனை எண்ணிக்கை வளர்ச்சியை பார்த்து முதலீட்டை மேற்கொள்வது நல்லது. 

முக்கிய குறிப்பு: மேலே உள்ள பார்வைகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள், வல்லுநர்கள் மற்றும் தரகு நிறுவனங்களின் கருத்துகளே தவிர, புதிய தலைமுறையின் கருத்து அல்ல. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு முதலீட்டாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.