பிட்காயின், ட்ரம்ப் எக்ஸ் தளம்
மார்க்கெட்

ட்ரம்ப் வெற்றி எதிரொலி| ஏற்றம் காணும் பிட்காயின்!

உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மதிப்பும் உயரத் தொடங்கியுள்ளது.

Prakash J

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தம்முடைய ஆட்சியில் யார் யாருக்குப் பங்கு கொடுப்பார் என்கிற தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மதிப்பும் உயரத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, கிரிப்டோ சந்தைகளுக்குச் சாதகமான சூழல் அமைந்து வருகிறது. ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் மதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தைச் சந்தித்துவரும் நிலையில், இன்று (நவ.12) 89,637 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.75,64 லட்சம்) என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா|தேர்தல் தோல்வியால் 170கோடி கடன்; ஜனநாயக கட்சியினருக்கு உதவி செய்யுங்கள் என ட்ரம்ப் கிண்டல்

காயின் மெட்ரிக்ஸின்படி, ஃபிளாக்ஷிப் கிரிப்டோகரன்சியின் விலை கடைசியாக 12% அதிகமாகி டாலர் 89,174 ஆக இருந்தது. இது சமீபத்தில், இது டாலர் 89,623 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதனால் வரும் நாட்களிலும் பிட்காயின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இதன் மூலம் பிட்காயினின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.

பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்தப் பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது பயன்படுத்த முடியும். இது பெரும்பாலும் ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் அதன் டெவலப்பர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காத இந்த பரிவர்த்தனையை ஏற்க எல்லா நாடுகளுமே தயக்கம் காட்டுகின்றன. தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிகவளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இதையும் படிக்க: ட்ரம்ப் வெற்றி | ஸ்டாா்லிங்க் நிறுவனம் இந்தியாவில் விரைவில் வர்த்தகம்.. எலான் மஸ்க் காட்டில் மழை