அஜய் தேவ்கன் கஜோல், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன் pt web
மார்க்கெட்

கொட்டிக்கொடுக்கும் ரியல் எஸ்டேட்? 4 ஆண்டுகளில் மட்டும் பாலிவுட் நட்சத்திரங்கள் செய்த முதலீடுகள்!

முன்னணி திரை நட்சத்திரங்கள் அணியும் ஆடை, ஆபரணங்கள் தொடங்கி, கார், வீடு என அனைத்துமே ட்ரெண்டில் இருக்கும். அந்தவகையில், பாலிவுட் திரை நட்சத்திரங்கள் 4 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள் தெரியுமா?

PT WEB

செய்தியாளர் கௌசல்யா

பாலிவுட் என்றாலே அமிதாப் பச்சன் இல்லாமலா? இவருக்கும் இவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரின் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சமீபத்தில் 200 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாம். ஆய்வுகள் சொல்கின்றன. சமீபத்தில் இவர்கள் இருவரும் மும்பையில் MULUND பகுதியில் ஒன்றல்ல.. இரண்டல்ல... 10 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியிருக்கிறார்களாம். அவர்கள் செய்த பத்திரப்பதிவு ஆவணங்களின் அடிப்படையில் இந்தத் தகவலை கூறியிருக்கிறது SQUARE YARDS என்ற நிறுவனம்.

24 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட இந்த குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்ய ஸ்டாம்ப் டியூட்டி மட்டும் ஒன்றை கோடி ரூபாயாம். பத்திரப்பதிவு செலவு 3 லட்சம் ரூபாய் செலுத்தினார்கள் என SQUARE YARDS தெரிவித்துள்ளது. இந்த MULUND ஏரியா, அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகள், திரும்பிப்பார்க்கும் இடமெல்லாம் பச்சைபசேலென்ற காட்சிகள் என ப்ரைம் லோகேஷன் என்பதை கவனிக்க வேண்டும்.

திரைப்பிரபலங்கள் தங்களின் வருவாயை பல விதங்களில் முதலீடு செய்து வருவது வழக்கம். குடியிருப்பு சொத்துகளை வாங்குவதில் அவர்கள் முன்னுரிமை அளிப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக, வர்த்தக வளாகங்கள், வாடகை கிடைக்கும் வகையிலான ரியல் எஸ்டேட் முதலீடுகளிலும் ஆர்வம் காட்டுவதாக SQUARE YARDS தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை இரண்டு பச்சன்களும் ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் 200 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாக SQUARE YARDS தெரிவித்துள்ளது.

ஜான்வி கபூர் 169 கோடி ரூபாயும், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனும் இணைந்து 156 கோடி ரூபாயையும் முதலீடு செய்திருக்கின்றனர். அஜய் தேவ்கன் மற்றும் கஜோல் ஆகிய இருவரும் 110 கோடி ரூபாயையும், ஷாஹித் கப்பூர் 59 கோடி ரூபாயையும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்திருப்பதாக SQUARE YARDS தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அசையா சொத்துகள் முதலீட்டில் முதலிடத்தில் இருப்பது ரியல் எஸ்டேட் துறை. பொருளாதார ஏற்ற இறக்கமின்றி வீடு அல்லது நிலம் வாங்குவதில் அனைவருக்குமே அலாதி பிரியம்தான். அதிக லாபம் வழங்கும் துறையில் ரியல் எஸ்டேட்டும் இருந்து வருகிறது. அதனால்தான் என்னவோ திரைப்பிரபலங்களும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் போலும்.