வணிகம்

இந்தியாவில் டிக்டாக் தடையும்.. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கின் கவலையும்.. : காரணம் என்ன ?

இந்தியாவில் டிக்டாக் தடையும்.. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கின் கவலையும்.. : காரணம் என்ன ?

webteam

இந்தியாவில் டிக்டாக் செயலியை தடை செய்தது வருத்தமளிப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது நிறுவனத்தின் பணியாளர்களிடம் டிக்டாக் செயலியை இந்தியா தடை செய்தது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலியை தடை செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் பயனீட்டாளர்களை கொண்டிருந்த டிக்டாக் செயலிக்கு, இது பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

இதேபோன்று ஃபேஸ்புக் மீதும் பல்வேறு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் தேர்தலில் ஃபேஸ்புக் டேட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் உலக அளவில் ஃபேஸ்புக் மீதும் பல நாடுகள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன. இதனால் பாதுகாப்பு காரணத்திற்காக டிக்டாக் போன்று ஃபேஸ்புக்கிற்கும் இந்தியாவில் தடை விதிக்கும் நிலை வரலாம் என மார்க் வருந்தியுள்ளார்.

ஏற்கெனவே ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியிருந்தபோது, இந்தியாவிடம் மார்க் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டிருப்பது அவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே இந்திய ராணுவ வீரர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் என ராணுவம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.