வணிகம்

ஆடம்பர பைக்குகளுக்கு விலை ஏறியது

ஆடம்பர பைக்குகளுக்கு விலை ஏறியது

webteam

ஃபேஷன் பொருட்கள், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ப்ரீ-ஜி.எஸ்.டி விற்பனையைத் தொடங்கியிருக்கும் நிலையில், லக்சுரி பைக்குகளின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஃபேஷன் பொருட்கள், துணிகள், வாகனங்கள் என பல்வேறு நிறுவனங்களும், ஆன்லைன் போர்ட்டல்களும் பெருமளவிலான சலுகை விலையை அறிவித்துள்ளன. இந்நிலையில், மிக அதிகவிலை கொண்ட ஹை-எண்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் டூ-வீலர்களின் விலையை ஏற்றியுள்ளன.

ஹை-எண்ட் பைக்குகளான ராயல் என்ஃபீல்ட், ஹ்யோசுங், பெனில்லி ஆகியவை ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு முன்பே, சலுகைகளை அறிவித்திருந்தாலும், ட்ரையம்ஃப், ட்யூகட்டி போன்ற நிறுவனங்கள், இத்தகைய சலுகைகளை அறிவிக்கவில்லை. ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ், 350சிசி என்ஜின் டிஸ்ப்ளேஸ்மெண்ட்டுக்கு அதிகமான பைக்குகளுக்கு 28% வரி விதிக்கப்படவுள்ளது. வரிவிதிப்பிற்கு பின் எங்கள் விலைகளில் ஏற்றம் இருக்கும். முடிவுகளை பொறுத்திருந்தே எடுப்போம் என ட்யூகாட்டி இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் ரவி அவலூர் தெரிவித்துள்ளார்.

மாறாக, ராயல் என்ஃபீல்ட், ஹ்யோசங், பென்னல்லி போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பலன்களை அளிக்கும் சலுகைகளை அறிவித்துள்ளன.