தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 23-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘தேயிலை விளையும் இலங்கையில் ஒரு டீயின் விலை ரூ. 100… உணவுத் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்துக்கும் யார் காரணம்?' எனக் கேட்டிருந்தோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கமெண்ட்ஸ்கள் கீழே...
நேற்றைய இலங்கையின் மத இன வாதத்தால் இன்றைய நிலை அவர்களுக்கு. இன்றவாது இந்திய மக்கள்
"சாதி மத இன மொழி வெறியால் நாடு அழியும்" என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனை மனிதன் மதிக்காதவன், கடவுளை வணங்கி பயன் இல்லை.
சிங்கள பயங்கரவாத கருத்தியல் தான் காரணம். மக்களுக்கு தேவையானதை செய்யாமல் இனவெறியை மட்டும் அரசியல் செய்த நாடு சிறீலங்கா
இலங்கை அரசுதான். பொருளாதாரக் கொள்கைதான்.. பாதுகாப்பு துறை மட்டும் கண்ணுக்கு தெரிந்தால் போதுமா?கூடுதலா #COVID19 !!
மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.. இது அனைவருக்குமான பாடம்.. மதம் இனங்களை விட பொருளாதாரம் மிகவும் முக்கியம்... பாடம் கற்போம்!
யார் காரணம், அரசியல்வாதிகள்.விவசாயிகளிடமிருந்து நிலத்தைப்பிடுங்கி கார்ப்ரேட்டிடம் கொடுத்துவிட்டு, அவிங்க அதுல விவசாயம் பண்ணாமல்வேற தொழில் செய்து, லாபம்பார்த்தவுடன் ஓடிவிட்டான். அதான் விளைப்பொருட்கள் இவ்வளவு கிராக்கி
இதேமாதிரிதான் இந்தியாவுக்கும் வரும். வேளாண்சட்டங்களை ஆதரித்தால்...
ஆர்கானிக்கோ , இயற்கையோ அதை படிபடியாக செய்திருக்க வேண்டும்.
நீண்ட கால இலக்கில் தான் அது சாத்தியமாகும் இலங்கைக்கு.
இரண்டாவது அதன் சுற்றுலா . 2009 இலங்கையில் தமிழர் இனபடுகொலை
நடந்த பிறகு இலங்கை மீது ஒரு அதிருப்தி சர்வதேச சுற்றுலா பயணிகள் இடையே நிலவுகிறது. இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கி இருக்க வேண்டும். துணை பிரதமரோ , துணை அதிபர் பதவியோ தமிழர்களுக்கு வழங்கி இருக்க மறந்து விட்டது. அப்படி செய்து இருந்தால் புவிசார் அண்டை நாடான இந்தியாவில் உள்ள தமிழர்கள் ஆதரவு இருந்திருக்கும். ஆன்மீக காரணமாக இலங்கை வரும் இந்துக்கள் முலம் அந்நிய செலவாணி வந்து கொண்டு இருக்கும் .
உலகம் சொல்வது இருக்கட்டும். நாங்கள் எங்கள் நாட்டு மக்களை சமமாக தான் பார்க்கிறோம் என்பதை நிருபித்து இருக்க வேண்டாமா இலங்கை.
ஒரு மகிழ்ச்சியான, அமைதியான நாட்டிற்கு தான் சுற்றுலா பயணிகள் செல்வர்.
அருகில் இருக்கும் அண்டை தமிழர்கள் கூட சுற்றுலா போக தயங்கும் ஒரு தேசமாக இலங்கை இருக்கிறது.
இந்த சமயத்தில் ஆபத்தான நோக்கம் கொண்டவர்கள் கரங்களில் இலங்கை சிக்கி விட கூடாது.