Life Insurance Corporation of India (LIC), நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம், 2024 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் நிகர லாபத்தை அதிகரித்து அனலிஸ்டுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முந்தைய ஆண்டை விட குறைவான பாலிசிகளை விற்பனை செய்த போதிலும், LIC ₹13,762 கோடி ஈட்டியுள்ளது, இது 2023 நிதியாண்டின் அதே காலாண்டில் இருந்த ₹13,421 கோடியுடன் ஒப்பிடும்போது 2.5% அதிகரிப்பு. மேலும் முதலீட்டாளர்களை மகிழ்விக்கும் விதமாக பங்குக்கு ₹6 இடைக்கால டிவிடெண்டாக அளித்துள்ளது. முழு நிதியாண்டையும் பார்க்கும்போது, LIC ன் ஒட்டுமொத்த வரிக்குப் பின் இலாபம் (PAT) ₹40,676 கோடியை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டின் ₹36,397 கோடியை விட அதிகமாகும்.
2023 ல் 62.58% ஆக இருந்த market share 58.87% ஆக 2024 நிதியாண்டில் குறைந்து உள்ளது.
முதல்முறை பிரீமியம் செலுத்துபவர்கள் எண்ணிக்கை வளர்ச்சி இந்த நிதியாண்டில் 4% குறைந்து உள்ளது.
5 லட்சத்திற்கும் மேல் பாலிசி எடுப்பவர்கள் எண்ணிக்கை 10% இல் 13% ஆக அதிகரித்து உள்ளது.
இந்த ஆண்டு 2 கோடியே 3 லட்சம் பாலிசிகளை விற்று உள்ளது, சென்ற நிதியாண்டை விட சிறிது குறைவு. .
நிறுவனங்களுக்கு பாலிசி விற்கும் வர்த்தகத்தில் 5.48% சரிவை சந்தித்து உள்ளது.
சந்தை பங்கைப் (Market Share) பெற தனியார் நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில், LIC ன் லாப விகிதம் இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. LIC புதிய வியாபார மதிப்பு (Value of New Business) லாப விகிதங்களை மேம்படுத்துவதில் உதவி செய்தது. புதிய பாலிசிகளின் எதிர்கால லாபத்தின் தற்போதைய மதிப்பைக் குறிக்கும் இந்த மதிப்பீடு, 2024 நிதியாண்டில் 4.66% உயர்ந்து ₹9,583 கோடியாக இருந்தது.
புதிய பாலிசிகளின் விற்பனை எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், LIC ன் இருக்கும் பழைய வாடிக்கையாளர் தளம் வலுவாக இருந்தது. இது அவர்களின் வலுவான புதுப்பித்தல் பிரீமிய வருமானத்தில் (Renewal) இருந்து தெளிவாகிறது, இது பாலிசிதாரர்களை வெற்றிகரமாக தக்கவைத்துக்கொள்வதைக் குறிக்கிறது.
LIC மருத்துவ காப்பீட்டில் மிகப்பெரிய லாப வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறது. அதில் தீவிரமாக செயல்பட உத்தேசித்து உள்ளது. வரும் நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய LIC இலக்கு நிர்ணயித்து உள்ளது. சந்தை மாற்றங்களுக்கு தங்களைத் தகவமைத்துக்கொள்ளும், லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மற்றும் தொடர்ந்து லாபகரமான முடிவுகளை வழங்கும் திறன், போட்டி மிகுந்த சூழலில் அவர்களின் மீள் திறனை (resilience) எடுத்துக்காட்டுகிறது. எத்தனை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வந்தாலும், மக்கள் LIC ஐ நம்புகிறார்கள் என்பதற்கு இந்த காலாண்டு முடிவுகள் சிறந்த எடுத்துக்காட்டு.