இந்திய வாகன சந்தையில் வரும் 15-ஆம் தேதி கியா கேரன்ஸ் எம்.பி.வி கார் விற்பனையை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது கியா இந்தியா நிறுவனம். கடந்த 2021 டிசம்பரில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் இதற்கான முன்பதிவை தொடங்கியது கியா. இந்த காரின் விலை 14 முதல் 18 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள அனந்தபூர் உற்பத்தி கூடத்தில் கியா நிறுவனம் கடந்த ஜனவரியில் இந்த கேரன்ஸ் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் மற்றும் டாடா நிறுவனத்தின் சஃபாரி ரக கார்களுக்கு இந்த கார் கடுமையான போட்டியை சந்தையில் கொடுக்கும் என தெரிகிறது.
மூன்று விதமான வேரியண்ட் கொண்ட எஞ்சின், மூன்று விதமான டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ், LED ஹெட்லேம்ப், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர் உள்ளன. அதே போல பாதுகாப்பு அம்சங்களாக டயர் பிரஷரை மானிட்டர் செய்யும் சிஸ்டம், டவுன்ஹில் பிரேக்கிங் சிஸ்டம், ஆறு ஏர் பேக்ஸ், ABS, நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சர் மாதிரியானவை இடம் பெற்றுள்ளன.