வணிகம்

ஒரு லட்சம் கோடி சந்தை மதிப்பை கடந்தது ஜொமோட்டோ

ஒரு லட்சம் கோடி சந்தை மதிப்பை கடந்தது ஜொமோட்டோ

webteam

ஜொமோட்டோ நிறுவனத்தின் ஐபிஓ இன்று காலை 10 மணிக்கு வெளியானது. ஐபிஓவில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு பங்கு ரூ.76க்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் நேற்றைய 40 சதவீத உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கிய இந்த பங்கு தற்போது 80 சதவீத உயர்வுடன் (அதிகபட்சம் 82.5%) வர்த்தகமாகி வருகிறது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.76-க்கு ஒதுக்கப்பட்ட பங்கு அதிகபட்சமாக ரூ.138 யை தொட்டது. வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு என்னும் இலக்கை எட்டி இருக்கிறது. அதிகபட்சமாக ரூ1.08 லட்சம் கோடியாக சந்தை மதிப்பு இருந்தது.

பட்டியலாகும் முன்பு சந்தை மதிப்பு சுமார் 65,000 கோடியாக இருந்தது. தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கிறது. சந்தை மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் முதல் 50 நிறுவனங்களுக்குள் ஜொமோட்டோ இடம் பிடித்தது. (வர்த்தகத்தின் இடையே முதல் 40 நிறுவனங்களுக்குள் இருந்தது)

முன்னதாக ஜூலை 27-ம் தேதி பட்டியலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்கள் முன்னதாக ஜூலை 23-ம் தேதியே ஐபிஓ பட்டியலானது.

ஐபிஓ மூலம் ரூ.9,375 கோடி ரூபாயை ஜொமோட்டோ திரட்டியது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் 375 கோடி ரூபாய் அளவுக்கான பங்குகளை விற்றது. 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் தற்போது 24 நாடுகளில் செயல்பட்டுவருகிறது.