வணிகம்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி

Rasus

ஜியோ ப்ரைம் திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடுவை ரிலையன்ஸ் நிறுவனம் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

ஜியோவின் இலவச சலுகைகள் மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரைம் மெம்பர்ஷிப் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஜியோ நிறுவனம். இதன் மூலம் பல்வேறு சலுகைகள் பெறலாம் எனவும், இந்த திட்டத்தில் இணைய மார்ச் 31-ம் தேதி தான் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் இணைய 15 நாட்கள் கூடுதலாக கால அவகாசத்தை நீட்டித்துள்ளது ஜியோ நிறுவனம்.

அதன்படி, 99 ரூபாய் செலுத்தி ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் உறுப்பினராகலாம். ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணமாக ரூ.99-ஐ செலுத்தி, 303 ரூபாய் டேட்டா கட்டணத் திட்டத்தில் சேர்ந்தால், அடுத்த 3 மாதங்களுக்கு அளவற்ற இணைய தள வசதி, அழைப்புகளைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.