வணிகம்

ஜியோ ஃபோன் முற்றிலும் இலவசம்: முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு

ஜியோ ஃபோன் முற்றிலும் இலவசம்: முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு

webteam

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஃபோன்கள் 100 கோடி பேருக்கு  இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி அதிரடியாக அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோனான ஜியோ ஃபீச்சர் ஃபோனை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய அவர், “ஜியோவில் தற்போது சுமார் 125 வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஃபோன் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யப்படும் இந்தத் தொகையை 3 வருடத்திற்கு பின் திரும்பப் பெற்று கொள்ளலாம்” என்று தெரிவித்தார். மேலும், இந்த மொபைல் ஃபோனுக்கு வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

வாய்ஸ் கால்கள் மற்றும் 4ஜி டேட்டாக்‍களை இலவசமாக வழங்கிய ஜியோ, தற்போது இலவசமாக ஃபோன்களை வழங்கவுள்ளது.