வணிகம்

வளர்ச்சி சரிவுக்கு பணமதிப்பு நீக்கம் காரணமல்ல: ஜேட்லி விளக்கம்

வளர்ச்சி சரிவுக்கு பணமதிப்பு நீக்கம் காரணமல்ல: ஜேட்லி விளக்கம்

webteam

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்ததற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமல்ல என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார். 
டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி, சர்வதேச பொருளாதார சூழல்களே நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைய காரணம் என தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஜனவரி-மார்ச் இடையிலான காலாண்டில் 6.1 சதவிகிதமாக குறைந்ததாக அரசு தெரிவித்திருந்தது. இது கடந்த 2 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி விகிதமாகும். பணமதிப்பு நீக்க அறிவிப்பு முந்தைய ஜூலை - செப்டம்பர் இடையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருந்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையே வளர்ச்சி சரிவிற்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.