எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்காக தருமபுரி மாவட்டத்தில் வெல்லம் தயாரிப்பு பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், விற்பனை மந்தமாக இருப்பதாக உற்பத்தியாளர்கள் வருந்துகின்றனர்.
பழைய தருமபுரி, சோகத்தூர், பாப்பாரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலைகளில் வெல்லம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. போதிய மழையில்லாததால் இங்கு விளைவிக்கப்படும் கரும்புகளில் பிழிதிறன் குறைவாக இருப்பதால் உற்பத்தி குறைவதாகவும், மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதி கரும்புகளில் பிழிதிறன் கூடுதலாக இருப்பதால் அங்கிருந்து கூடுதல் விலைக்கு கரும்பு வாங்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
இருப்பினும் ஒரு கிலோ வெல்லம் 35 முதல் 40 ரூபாய் வரையே விற்பதோடு, விற்பனை மந்தமாக இருப்பதாக உற்பத்தியாளர்கள் வருந்துகின்றனர்.