வணிகம்

உலக வங்கி தலை‌வராகிறாரா இ‌‌வாங்கா ட்ரம்ப்?

உலக வங்கி தலை‌வராகிறாரா இ‌‌வாங்கா ட்ரம்ப்?

webteam

உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியு ள்ள‌ன. 

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டு கள் உள்ள நிலையில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்தப் புதிய தலைவ ருக்கான போட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இவாங்கா மற்றும் ஐநாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹா லே ஆகியோர் முன் னணியில் உள்ளதாக தக‌வல் வெளியாகியுள்ளது. உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக இருப்பதால் அமெரிக்கர்களே‌ உலகவங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.‌