ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள், டேட்டா பயன்படுத்துவது கடந்த 3 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன் சராசரியாக ஒருவரின் ஓரு மாத டேட்டா பயன்பாடு 70 எம்பியாக இருந்ததாகவும் தற்போது அது ஒன்று புள்ளி ஆறு ஜிபி ஆக அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்தார்.
செல்ஃபோன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 25 கோடியே 91 லட்சத்திலிருந்து 42 கோடியே 92 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்