வணிகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்

கலிலுல்லா

‌‌‌‌வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

காலை 11 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 44 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 178 புள்ளிகள் இறங்கி 17 ஆயிரத்து 338 புள்ளிகளில் வணிகமாகியது.

இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், எம் அண்டு எம், ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன. அந்நிய முதலீடுகள் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறுவது, மற்ற சில ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்படும் இறக்கம் போன்றவையே பங்குச் சந்தைகள் சரியக் காரணமாகக் கூறப்படுகிறது.