2050-ல் இந்தியாவின் பொருளாதாரம் 10 மடங்காக உயரக்கூடிய வகையிலான வியத்தகு நிலையில் உள்ளது என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை இந்தியா குறைந்த விலையில் வழங்கும் என்றும் அதானி குழும தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
வர்த்தக மாநாடு ஒன்றில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி பேசும்போது, "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை இந்தியா மிகக் குறைந்த விலையில் வழங்கும். சூரியனும் காற்றும் எப்போதும் நமக்கு இலவசமாக கிடைக்கும்.
இந்தியா ஒரு வியத்தகு கட்டத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 10 மடங்கு மேம்படும். 2050 காலகட்டத்தில் இந்தியா டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பல நிறுவனங்களை உருவாக்கியிருக்கும்.
எங்கள் குழுமம், 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க மின் நிறுவனமாக மாறுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி துரிதப்படுத்தப்படுவதால் மின்சாரத்தின் செலவு தொடர்ந்து குறையும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் மூலம் நாடு மலிவான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்" என்றார் அதானி.