வணிகம்

12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த விலை பணவீக்கம் உயர்வு - மத்திய அரசு

12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த விலை பணவீக்கம் உயர்வு - மத்திய அரசு

Veeramani

நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 14.23% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவிள்ளது. பெட்ரோலியப் பொருட்கள், உலோகப் பொருட்கள், ரசானயப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்ததே மொத்த விலை பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து 8ஆவது மாதமாக இரட்டை இலக்க அளவில் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2005ஆண்டுக்கு பின் மொத்த விலை பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. சில்லறை விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 4.91% ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் கூறியுள்ளது.